Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்டசபை; சபாநாயகர்; நம்பிக்கை இல்லா தீர்மானம்; இன்று வாக்கெடுப்பு!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (10:44 IST)
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது குரல் வாக்கெடுப்பாக நடைபெற உள்ளது.


 
 
கடந்த பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அதில் ஏற்பட்ட ரகளை காரணமாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 122 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இதன் மூலம் சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில், சட்டசபை  கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியதும், முதலில் கேள்வி-பதில் நேரம் ஒரு மணி நேரம் நடைபெறும். தொடர்ந்து 11 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தப்படும். இதில் குறைவான ஓட்டுகள் பெற்றால் அவரது பதவி பறிபோகும். துணை சபாநாயகர்  பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்துவார். இதன் மூலம் சபாநாயகர் பதவி பறிபோகுமா இல்லையா என்பது தெரிந்துவிடும். வாக்கெடுப்பின் போது சபாநாயகராக உள்ள தனபால் அவையில் இருக்கமாட்டார் என்பது  குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments