Publish Date: Fri, 03 Jun 2022 (17:42 IST)
Updated Date: Fri, 03 Jun 2022 (17:43 IST)
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து அந்த இரண்டு மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
தமிழகத்தில் உள்ள சென்னை செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார் மேலும் இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவர் அறிவுறுத்தி உள்ளார்