Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெம்டெசிவிர் மருந்தை சமூக வலைத்தளம் மூலம் விற்க முயன்ற மூவர் கைது!

Advertiesment
ரெம்டெசிவிர் மருந்தை சமூக வலைத்தளம் மூலம் விற்க முயன்ற மூவர் கைது!
, ஞாயிறு, 16 மே 2021 (11:41 IST)
கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருக்கின்றனர் என்பதும், தினமும் 300 பேர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தாலும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை வரிசையில் காத்திருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்துக்கு இருக்கும் பற்றாக்குறையை பயன்படுத்தி ஒரு சிலர் இதை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த மூன்று பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2  ரெம்டெசிவிர் குப்பி மற்றும் ரூபாய் 80,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது 
 
அடையாறு துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாரின் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்தை வங்கதேசத்திலிருந்து அவர்கள் இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் ரூபாய் 25 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து! – முதல்வர் நடவடிக்கை!