Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரண்பேடியின் சர்ச்சை டுவீட் : சட்டசபையில் வெளியேறிய எதிர்க்கட்சி ! அமைச்சர் ஆவேசம் !

கிரண்பேடியின் சர்ச்சை டுவீட் :  சட்டசபையில் வெளியேறிய எதிர்க்கட்சி ! அமைச்சர் ஆவேசம் !
, திங்கள், 1 ஜூலை 2019 (14:32 IST)
இன்று சட்டசபை கூட்டத்தொடர் காலையில் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்ட்சி தலைவரும் திமுக தலைவருமான முக. ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அதில், இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 27 மாநகரங்களில் வரும் 2020 ஆம் ஆண்டில் தண்ணீரே இல்லாத நிலைவரும் என்று எச்சரிக்கை அறிவிப்பட்டது.  சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளில் தண்ணீர் இல்லை.நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டது. எனவே எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் ,இதுசம்பந்தமாக சட்டசபை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினேன் என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர், தமிழகத்தில் ஊழல் நடக்கிறது என்றும், மோசமான அரசு நடப்பதாகவும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டுவீட் பதிவிட்டுள்ளார்.இது தமிழகத்தை ஸ்டாலின் அவமானப்படுத்தும்படி உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
webdunia
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சிவி சண்முகம் :புதுச்சேரி ஆளுநருக்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது : அவர் சரியாக ரிவாகம் நடத்துகிறரா ? அங்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறதா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கோபத்துடன் தன் கருத்தை தெரிவித்தார்.
 
இதனையடுத்து ஆளுநர் குறித்து சட்டசபையில் பேசக்கூடாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதை குறித்துப் பேசக் கூடாது என்றும் கூறிய சபாநாயகர் அவர்கள் இருவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.இதற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அவர்  தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள்  எதிர்ப்பு தெரிவித்து கிரண்பேடியின் டுவிட்டர் பதிவை கண்டித்தும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகத் தகவல்கள் வெளியாகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: சிவகங்கையில் பரபரப்பு