தமிழக வெற்றிக் கழக ஆதரவு இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்ஸர் விஷ்ணுவை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நிலையில் ஏராளமான இளைஞர்கள் அவரது கட்சியில் இணைந்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக கட்சிக்கு ஆதரவாக இயங்கி வருகின்றனர். அவ்வாறாக தவெகவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருபவர்களை விஜய் வாழ்த்தியதோடு, அவர்களை விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று அழைப்பதாக சொன்னார்.
இந்நிலையில் பெண்கள் உரிமை குறித்து மூச்சுமுட்ட பேசிய தவெக விர்ச்சுவல் வாரியர் ஒருவர் பெண்களிடம் தவறாக சாட் செய்ததற்காக தர்ம அடி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சராகவும், தவெக ஆதரவாளராகவும் உள்ள ஸ்ரீ விஷ்ணு என்பவர் சமூக வலைதளங்களில் டான்ஸ் வீடியோ, தவெக ஆதரவு வீடியோ உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது நண்பரின் தங்கை ஒருவரிடம் ஆன்லைன் சாட்டில் ஆபாசமாக பேசி அவரிடம் தவறான உறவுக்கு முயன்றதாக தெரிகிறது.
இதனால் அந்த பெண்ணின் அண்ணன் மற்றும் நண்பர்கள் சிலர் விஷ்ணுவை பிடித்து வைத்து அடித்து அவர் என்ன செய்தார் என்பதை சொல்ல சொல்லி வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K