Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

Advertiesment
TVK Workshop

Prasanth K

, ஞாயிறு, 6 ஜூலை 2025 (14:20 IST)

தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வேகமாக தயாராகி வரும் நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி பட்டறைக்கு கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் இரண்டு கோடி இல்லங்களில், இரண்டு கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

இது குறித்துச் சென்னை. பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், வருகிற 08.07.2025 அன்று காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடன், கழகத்தின் மற்ற நிர்வாகிகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

மேலும் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறையை தொடர்ந்து பூத் கமிட்டி மாநாட்டில் நடத்தி முடிக்காமல் உள்ள மண்டலங்களுக்கான மாநாட்டை முடிக்கவும், அதன்பின்னர் அனைத்து தொகுதிகளிலும் பயணம் மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!