பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: மீண்டும் போர்க்கொடி தூக்கும் வேல்முருகன்..!

Mahendran
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (17:14 IST)
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், அதனைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன், "நீயா நானா போன்ற நன்மை பயக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள். ஆனால், தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் 'பிக்பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளின் லாப நோக்கம் நிறுத்தப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
 
மேலும், "விரைவில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தடை செய்யப்படாவிட்டால், நிகழ்ச்சி நடைபெறும் தளத்தையும், விஜய் டிவி அலுவலகத்தையும் கட்சியின் மகளிர் அணியினர் முற்றுகையிடுவார்கள்," என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments