Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? விஜய் அதிரடி முடிவு..!

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (07:34 IST)
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு நடத்தும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது முதல் மாநாடு எங்கே எப்போது என்றது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் , ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் தற்போது தீவிரமாக மாநாடு நடத்தும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் மாநாடு சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் ஒன்றில் நடக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சேலத்தில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ள நாழிகல்பட்டி பகுதியில் உள்ள திடலை சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டதாகவும் அந்த இடம் மாநாடு நடத்த சரியாக இருக்கும் என்று பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கலாம் என்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, மதுரை, திருச்சியை விட சேலத்தில் மாநாடு நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மாநாடு அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதாகவும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments