Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருதுநகர் அருகே டி.வி. வெடித்து மாணவர் உயிரிழப்பு

Advertiesment
விருதுநகர் அருகே டி.வி. வெடித்து மாணவர் உயிரிழப்பு
, செவ்வாய், 14 மார்ச் 2017 (23:12 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல் போன் ஆங்காங்கே வெடித்து அனைவரையும் பயமுறுத்தியது. இந்நிலையில் டிவி ஒன்று வெடித்து அந்த டிவியை பார்த்து கொண்டிருந்த பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்



 


விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் என்ற பகுதியில் ராஜேஷ் என்பவரின் மகன் தயாநிதி 6ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று இரவு தயாநிதி வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தொலைக்காட்சிப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் மாணவன் தயாநிதியின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு உடல் முழுவதும் பரவியது. இதில் சிறுவன் தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் வயதையாவது சரியா சொல்லுங்க முதல்வரே. நெட்டிஸன்கள் கிண்டல்