ஆண்களுடன் பழகுவதை கண்டித்த தாய்! – நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற சிறுமி!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (11:15 IST)
தூத்துக்குடியில் ஆண்களுடன் பழகுவதை கண்டித்த தாயை நண்பர்களுடன் சென்று மகளே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வண்ணார் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனியலட்சுமியின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பலரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

ஆண்களிடம் பேசுவதை சிறுமி தொடர்ந்து வந்த நிலையில் சிறுமியை தாய் முனியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, தனது ஆண் நண்பர்களுடன் திட்டமிட்டு முனியலட்சுமி தூங்கி கொண்டிருந்த நேரத்தில் நண்பர்கள் மூலமாக கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

பின்னர் ஒன்றும் தெரியாதது போல போலீஸுக்கு போன் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் சிறுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் சிறுமியையும், கொலைக்கு உதவி செய்த ஆண் நண்பர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே வழக்கை, மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன்? கரூர் நெரிசல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

வாட்டர்மெலன் திவாகர்லாம் ஒரு ஆளா? பிக்பாஸையே கழுவிய ஆதிரை! - முதல் எலிமினேஷன் யார்?

தாலிபான்கள் வெளிவிவகார அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. காபூலில் மீண்டும் இந்திய தூதரகம்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

அடுத்த கட்டுரையில்
Show comments