Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைப்பதால் எந்த பிரச்சனையும் வராது- அமைச்சர் தங்கமணி

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (12:06 IST)
ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக பின்பற்றுவதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர்மோடி மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ள நிலையில் மெழுகுவர்த்தி ,அகல்விளக்கை ஏற்றும் முன் ஆல்கஹால் கலந்து சானிடைசரி பயன்படுத்த வேண்டாமென பிரசார் பாரத் செய்தி சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்தார். ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலமாக நமது ஆரோக்கியத்திற்காக உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சக மக்களை அந்த 9 நிமிடத்தில் நினைத்து  பார்க்க வேண்டுமென அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து, தமிழக அமைச்சர் வேலுமணி, இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைப்பதால் எந்த பிரச்சனையும் வராது என தெரிவித்துள்ளார்.

மேலும், இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மக்கள் அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம் மின் சாதனங்களுக்கு பழுது ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை மருத்துவமனைகளில் மின் விளக்குகள் அணைக்கப்படாது என தமிழக  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments