Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீது வழக்குப்பதிவு உண்மைதான்: மாரிதாஸ்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (11:52 IST)
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவும்  தீவிரவாதமும் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட மாரிதாஸ் மீது மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பிணையில் வரமுடியாத 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த செய்தி குறித்து மாரிதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய விளக்கம் பின்வருமாறு: ஆம்‌, இன்று என்‌ மீது வழக்குப்‌ பதிவு செய்யப்பட்ட தகவல்‌ உண்மை. நேற்று வெளியிட்ட வீடியோ அடிப்படையாகக்‌ கொண்டு பதிவு செய்யப்பட்டதாகத்‌ தகவல்‌. அந்த வீடியோவில்‌ எந்த இடத்தில்‌ இஸ்லாமியர்களைக்‌ காயப்படுத்தினேன்‌ என்று கொஞ்சம்‌ யாரும்‌ சரியாகச்‌ சொல்ல முடியுமா?
 
இது சும்மா மிரட்டிப்‌ பார்க்கலாம்‌ என்று வேலை. "எந்த மத்தின்‌ உள்‌ நம்பிக்கையையும்‌ நான்‌ ஒரு நாளும்‌ காயப்படுத்திப்‌ பேசியதும்‌ இல்லை அந்த நோக்கமும்‌ எனக்கு இருந்ததில்லை. இந்துக்களின்‌ நியாயமான விசயத்திற்குக்‌ குரல்‌ கொடுத்து வந்துள்ளேன்‌ அதற்காக இஸ்லாமியரை மட்டும்‌ அல்ல எந்த மதத்தினரையும்‌ காயப்படுத்த நினைத்தவன்‌ அல்ல”. எனவே எந்த வழக்கையும்‌ எதிர்‌ கொள்ளத்‌ தயார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

தெருநாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல்: ராகுல் காந்தி கண்டனம்

சீனாவுடனான உறவை முற்றிலும் துண்டிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments