Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 வயது குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

2 வயது குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
2 வயது குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!
இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
 
செஞ்சி அருகே துளசி என்ற பெண், பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது இரண்டு வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனை அவர் வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து துளசியை தேடிவந்தனர் 
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திராவில் துளசியை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தில் அவர் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆத்திரத்தில் குழந்தையை அடிப்பதாக கூறி உள்ளார் 
 
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் குழந்தையை தாக்கிய வீடியோவை சமூக வலைத் தளங்களில் யாரும் பகிர வேண்டாம் என குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான சேவைக்கு மேலும் ஒரு மாதம் தடை நீடிப்பு: மத்திய அரசு அறிவிப்பு