Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லாது.. செல்லாது...பொதுக்குழு செல்லாது.. - தினகரன் காட்டம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (12:26 IST)
இன்றைய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது. அதில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதில் முக்கியமாக, கட்சியை வழி நடத்த வழி காட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முழு அதிகாரம் பொருந்திய அந்த வழிகாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது :
 
பொதுச்செயலாளர் சசிகலா மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும். எனவே அவரில்லாத இந்த கூட்டமும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது. இந்த தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும், துரோகமும் கூட்டணி வைத்தும் நடக்கும் ஆட்சியை பொதுமக்களும், பொதுமக்களும் விரும்பவில்லை.
 
மறைந்த மாணவி அனிதாவின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, இந்த ஆட்சியை வீட்டிக்கு அனுப்புமாறு என்னிடம் பலரும் கூறினார். மேலும், நான் செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் இதையே கூறுகிறார்கள்.
 
நடப்பது ஜெ.வின் ஆட்சி அல்ல. தேர்தல் வந்தால் இவர்கள் டெபாசிட் இழப்பார்கள். அப்போது உண்மையான அதிமுக யார் எனத் தெரிய வரும். ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரை பார்க்க தொண்டர்களுக்கும், எங்களுக்கும் துளிகூட விருப்பமில்லை. எனவே, அவர்களை வீட்டிற்கு அனுப்பும் வேலையை நான் ஏற்கனவே துவங்கி விட்டேன். 
 
திமுகவுடன் நாங்கள் கை கோர்த்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதில் உண்மையில்லை. தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments