தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார் டிடிவி தினகரன்.
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதே சமயம் சின்னங்களில் குளறுபடி, கட்சியினர் இடையேயான மோதல் ஆகியவற்றால் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உறுதியுடனும் தைரியத்துடனும் முதல்கட்ட தேர்தல் களத்தில் தேனீக்களாய் சுழன்று களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே உத்வேகத்துடன் இரண்டாம் கட்ட வாக்குபதிவிலும் செயலாற்றிடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல மற்றொரு பதிவில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளிலும் அதிகாரபலத்தையும் வன்முறையையும் பயன்படுத்தி ஆளும்கட்சியினர் அத்துமீறி முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே விழிப்புடனும், புத்திசாலித் தனத்துடனும் செயல்பட்டு அதனை தடுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.