Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் சின்னம் குக்கர் & முரசு - பிரச்சத்தில் பம்பரமாய் சுழலும் டிடிவி!!

Advertiesment
உங்கள் சின்னம் குக்கர் & முரசு - பிரச்சத்தில் பம்பரமாய் சுழலும் டிடிவி!!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (13:34 IST)
இந்த மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மதுரையில் டிடிவி தினகரன் பேச்சு. 

 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவரை ஆதரித்து தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் மதுரை மத்திய தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிக்கந்தர் பாஷா ஆதரித்து, அதேபோல் மதுரை மேற்கு தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அதன் வேட்பாளர் அவர்களை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தின் கூறும்போது,
 
இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்கு கொண்டு வரவும், அதேபோலவே தீயசக்தி கூட்டம் மீண்டும் வரவிடாமல் தடுக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வெற்றிச் சின்னம் முரசு சின்னம். மதுரை மேற்கு தொகுதியில் மதுரை மத்திய தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து தமிழ்நாட்டு நிலையான ஆட்சி மக்கள் விரும்பும் ஆட்சி மக்களுக்காக செயல்பட ஆட்சி நேர்மையான ஆட்சி ஊழலற்ற ஆட்சி வெளிப்படையாக ஆட்சி வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய வெற்றிச் சின்னம் முரசு சின்னம் மற்றும் குக்கர் சின்னம்.
 
அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இன்று சமுதாய சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழவும் இங்கே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வீட்டுக்கு ஒருவர் வேலைவாய்ப்பு அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் அதேபோல் ஆசிரியருக்கும் அனைத்து திட்டங்களை நிறைவேற்றி தர நீங்கள் வாக்களிக்கும் என்று வெற்றி சின்னம் முரசு சின்னம் குக்கர் சின்னம் தீய சக்திகள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விடு உங்கள் கடமை.

 
அதேபோல் தமிழின துரோகிகள் ஆட்சியில் தொடர விடாமல் செய்வது உங்கள் கடமை இதை நீங்கள் சரிவர செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல தமிழர்கள் தலை நிமிர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் முரசு மற்றும் குக்கர் சின்னம் இந்த தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் இந்த பிரச்சார கூட்டத்தில் அமமுக மற்றும் தேமுதிக எஸ்டிபிஐ கட்சியினர் அதன் கூட்டணி கட்சி நிர்வாகி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயில்லா பிள்ளைங்க நாங்க.. கைவிட்டுடாதீங்க! - அமைச்சர் உதயகுமார் உருக்கம்!