Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செருப்பு வீச்சா... ஈன புத்தி எங்களுக்கு கிடையாது: பொங்கிய டிடிவி!!

Advertiesment
செருப்பு வீச்சா... ஈன புத்தி எங்களுக்கு கிடையாது: பொங்கிய டிடிவி!!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (11:43 IST)
அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் இல்லை என டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு. 

 
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பல அதிமுக பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு வர இருந்ததால் அமமுகவினரும் குவிந்திருந்தனர்.
 
இந்நிலையில் மரியாதை செலுத்தி முடித்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நேரத்தில் அதிமுக – அமமுகவினரிடையே தகராறு எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர் செருப்பை எடப்பாடி பழனிசாமி கார் மீது வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் மீது அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
webdunia
இதனிடையே இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறுத்துள்ளார். மேலும் அவர் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அதிமுகவைச் சேர்ந்தவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக  தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன். 
 
பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது.  
webdunia
அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல. 
 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா விதிமுறைகளை மீறிய கமல்ஹாசன்!? – விளக்கம் கேட்கும் அரசு!