Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைமலை அடிகளார் பிறந்த தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து..!

Advertiesment
மறைமலை அடிகளார் பிறந்த தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து..!
, சனி, 15 ஜூலை 2023 (15:23 IST)
தமிழ் மொழியை உயிர் மூச்சாக கொண்டிருந்த மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ் மொழியை உயிர் மூச்சாக கொண்டிருந்த மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
 
தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கி வழிநடத்திய முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த மறைமலை அடிகளார் அவர்கள் கல்வியாளராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர்.
 
தமிழ் மொழி பற்றுடன் திகழ்ந்த மறைமலை அடிகளார், பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய நடையில் உரை எழுதியவர். தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தமிழர்களுக்கு ஆங்கில புலமையும் அவசியம் என்பதை வலியுறுத்தியவர்.
 
மறைமலை அடிகளாரின் வழியை பின்பற்றி மொழி ஆற்றலுடன் திகழ்வதுடன், அன்பு, அறத்தை கடைபிடித்து வாழவும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் -உதயநிதி டுவீட்