Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருப்பதே 2 லட்சம் தான், இதில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியாம்!

இருப்பதே 2 லட்சம் தான், இதில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியாம்!

Advertiesment
இருப்பதே 2 லட்சம் தான், இதில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியாம்!
, செவ்வாய், 28 மார்ச் 2017 (16:15 IST)
ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த தினகரன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என ஒரு பெண் நிர்வாகி கூறியுள்ளார்.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் கூறி வருகிறார். இதனையடுத்து அவரை வெற்றி பெற வைக்க ஒரு பெரிய அணியே களம் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில் தினகரனுக்காக பிரச்சாரம் செய்து வரும் சென்னையை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என ஆர்வ மிகுதியால் கூறினார்.
 
ஆர்கே நகர் தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களே 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் தான். ஆனால் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்த பெண் நிர்வாகிகள் கூறியதை கேட்ட தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் உடனடியாக தினகரனது கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
 
பின்னர் தினகரன் அந்த பெண் நிர்வாகியை எச்சரித்து சில அறிவுறைகளை வழங்கினார். மேலும் கட்சித் தலைமை குறிப்பிடுபவர்கள் தவிர, மற்றவர்கள் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் அவர் கூறியதாக அதிமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஞ்சா பழக அரசு அனுமதி: எங்கு தெரியுமா?