Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேட்டாய் பொங்கிய தினகரன்: ஆக மொத்ததுல பெரியாருக்காக பொங்கிட்டாரு...

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:54 IST)
கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் மறைந்த தலைவர்களைப் பற்றி மோசமாக பேசுவது தவறு என பாஜவுக்கு டிடிவி தினகரன் கண்டனம். 
 
இன்று பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் 46வது நினைவு தினம் திராவிட கட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக பெரியார் – மணியம்மை திருமணத்தை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.
 
பின்னர் பலரின் எதிர்ப்புக்களால் அந்த பதிவை பாஜக நீக்கியது. இருப்பினும் பாமக தலைவர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரனும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
டிடிவி தினகரன் தனது டிவிட்டரில் பதிவிட்டதாவது, தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரை இழிவுப்படுத்தும் விதமாக தமிழக பா.ஜ.கவினர் ட்வீட் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். 
 
கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் மறைந்த தலைவர்களைப் பற்றிய இத்தகைய மோசமான தாக்குதல்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல.
 
சர்ச்சை எழுந்தவுடன் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும் எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments