Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: டிடிவி தினகரன்

Advertiesment
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: டிடிவி தினகரன்
, புதன், 20 செப்டம்பர் 2023 (11:32 IST)
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதா வரவேற்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.
 
அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.. நாமக்கல்லில் பரபரப்பு..!