யார் ஆட்சிக்கு வந்தா என்ன? தண்ணீர் கிடைக்குமா? டிடிவி தினகரன்!

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:00 IST)
கர்நாடக தேர்தலின் போது, அங்கு பாஜக் ஆட்சி அமைத்தால் காவிரிநீர் தமிழகத்திற்கு எந்த சிக்கலும் இன்றி கிடைக்கும் என பரவலாக கூறப்பட்டது. ஆனால், அங்கு மஜக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. 
 
உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தை சுமூகமாக முடித்து வைத்தாலும், அது எந்த அளவிற்கு செயல்பாட்டில் வரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இதற்கு இடையில், கர்நாடக அணையில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை ரஜினி நேரில் காண, விரைவில் கர்நாடக முதல்வராக போகும் குமாரசாமி ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் பின்வருமாறு பேசியுள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழகத்திற்கு பாஜகவால் மட்டுமே காவிரிநீர் கிடைக்கும் என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் கர்நாடகவில் பாஜக் ஆட்சி அமைத்தால் எந்த சிக்கலும் இன்றி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments