Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் 2 துணை முதல்வர்கள்? - குமாரசாமி ஆலோசனை

கர்நாடகாவில் 2 துணை முதல்வர்கள்? - குமாரசாமி ஆலோசனை
, திங்கள், 21 மே 2018 (11:30 IST)
கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ள சூழ்நிலையில், அங்கு இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து, குமாரசாமி முதல்வர் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. வருகிற புதன்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்ப்படுகிறது. 
 
மதசார்பற்ற ஜனத தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனாலும், சில வருடங்கள் குமாரசாமியும், சில வருடங்கள் காங்கிரஸூம் ஆட்சி பொறுப்பில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதுபற்றி பேசியதாகவும்., ஆனால், குமாரசாமி அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 
 
நேற்று செய்தியாளர்களிடம் குமாரசாமி பேட்டியளித்த போது கூட இந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அந்த பேச்சுக்கே இடமில்லை. தனது தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் என அவர் தெரிவித்தார். அதேபோல், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால், காங்கிரஸ் தரப்பில் இரண்டு துணை முதல்வர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மற்றொருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில், சித்தராமய்யா, குலாம் நபி ஆசாத், குமாராசாமி, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா?