Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் அமமுக போட்டியில்லை – காரணம் சொன்ன தினகரன் !

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (14:18 IST)
வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் வருமானவரி துறை ரெய்டு நடத்தியது. இதில் கதிர் ஆனந்த் உறவினர்கள் வீட்டில் 10 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என கூறப்பட்டதால் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து வேலூர் சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஆக்ஸ்டு 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததையடுத்து மீண்டும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமியும் போட்டியிடுவார்கள் என அக்கட்சிகள் சார்பில் அறிவித்துள்ளன.

இதையடுத்து இந்தத் தேர்தலில் அமமுக போட்டியிடுமா என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ‘அமமுகவை பதிவு செய்யும் பணியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். தேர்தலில் நின்றால் பரிசுப்பெட்டி சின்னம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனவே கழகத்தைப் பதிவு செய்யப்பட்ட பின் தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அறிவிக்கும் போது கட்சியைப் பதிவு செய்திருப்போம். அதனால் அந்த இடைத்தேர்தல்களில் போட்டியிடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments