Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவோட இணைய மாட்டோம்.. நீங்க இங்க வாங்க! – டிடிவி தினகரன்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (15:33 IST)
சமீபத்தில் சசிகலா தலைமையில் திவாகரனின் கட்சி அதிமுகவில் இணைந்த நிலையில் தாங்கள் அவ்வாறு இணைய போவதில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், மறுபக்கம் நான்தான் அதிமுகவின் பொதுசெயலாளர் என சசிகலா கூறிவருகிறார், கூறிவருவதோடு மட்டுமல்லாமல் கழக பொதுசெயலாளர் என்ற பெயரிலேயே அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சி சசிகலா முன்னிலையில் அதிமுகவுடன் இணைந்தது. இந்த நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. அதை தொடர்ந்து சசிகலாவின் அதிமுக கட்சியில் அமமுகவும் இணையுமா என்ற பேச்சுகள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கமளித்து பேசியுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அதிமுகவில் என்றுமே அமமுக இணையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கு இருந்தாலும் அமமுகவில் இணைந்து, மீண்டும் தமிழ்நாட்டிற்கு அவரின் ஆட்சியை கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments