Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுவேட்பாளரை நிறுத்தினால் அமமுக வேட்பாளர் வாபஸ் பெறுவாரா?”- டிடிவி தினகரன் விளக்கம்

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:58 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவை எதிர்த்து போது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் வாபஸ் பெறுவாரா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் இருந்து பொது வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ற காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். 
 
ஆனால் எதிர்கட்சிகள் சார்பில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வேட்பாளரை நிறுத்தி உள்ளதால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வாபஸ் பெறுவாரா என்ற கேள்விக்கு பொது  வேட்பாளர் நிறுத்தினால் திமுகவை வீழ்த்துவது என்பது எளிது என்பது உண்மைதான் ஆனால் அதே நேரத்தில் எங்கள் கட்சியின் வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments