Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது: 4 பேர் கொலை குறித்து டிடிவி தினகரன்..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:06 IST)
தமிழ்நாட்டில் நாள்தோறும்  கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் திரு.பன்னீர்செல்வத்தின் தாயார் ரத்தினம்மாள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த மேலும் மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காகவே ரத்தினம்மாள்  உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் நாள்தோறும்  கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு தற்போது நடைபெற்ற கொலைச் சம்பவமும் உதாரணமாக அமைந்துள்ளது. 
 
காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம்,  ஒழுங்கு பிரச்னைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் எனவும்  கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments