Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு - உச்ச நீதிமன்றம் செல்லுமா தினகரன் தரப்பு?

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (11:20 IST)
18 எம்.ஏல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவு செல்லும் என தீர்ப்பு வந்துள்ளதால், தினகரன் தரப்பு அடுத்து என்ன செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகரின் முடிவில் தவறு இல்லை மற்றும் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல எனக்கூறினார். மேலும், 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததோடு, 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
இந்த தீர்ப்பு தினகரன் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன் “இது ஒரு அனுபவம்தான். அடுத்து என்ன செய்வதென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன். இடைத்தேர்தலை சந்திப்பதா அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா என பேசி முடிவெடுப்போம்” என தெரிவித்தார்.
 
எப்படியும், தினகரன் தரப்பு மேல் முறையீடு செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments