அதிமுக-அமமுக இணைய போவது உண்மையா? வெற்றிவேல் அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (22:59 IST)
அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்றும் வரை தான் அமமுக என்ற கட்சியை நடத்த போவதாகவும், அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றிய பின்னர் அமமுகவை கலைத்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால் அவர் அதிமுகவை கைப்பற்றும் முன்னரே அமமுக தானாக கலைந்துவிடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து பிள்ளையார் சுழி போட்ட நிலையில் இன்னும் சிலர் அதிமுகவுக்கோ அல்லது திமுகவுக்கோ செல்ல தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் வலது கை போல் செயல்பட்டு வரும் தங்கத்தமிழ்செல்வனே தடுமாறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவும், அமமுகவும் இணையப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை  என்றும், சசிகலா மற்றும் தினகரனை தவிர வேறு யாரையும் தலைமையாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இருப்பினும் என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments