Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி.மு.க.வில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார் –அச்சத்தில் அமமுக, அதிமுக!

தி.மு.க.வில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார் –அச்சத்தில் அமமுக, அதிமுக!
, புதன், 19 டிசம்பர் 2018 (08:17 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னால் அதிமுக முன்னாள் அமைச்சரும் அமமுக ஆதரவாளருமான செந்தில் பாலாஜி திமுக வில் இணைந்தார்.

தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக செந்தில் பாலாஜி திமுக வில் இணைந்தார். 18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே ஆட்டி வருகிறது.

செந்தில் பாலாஜியின் இந்த முடிவால் அமமுக ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இதனால் அவசர அவசரமாக தினகரன் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனைக் கேட்டுள்ளார். இந்த விஷயத்தில் அமமுக எந்த அளவிற்குப் பயந்து போயுள்ளதோ அதே அளவிற்கு அதிமுக வும் பயந்து போயிருக்கிறது. அதனால் அடுத்து யாரும் பிறக் கட்சிகளுக்கு தாவுவதற்குள் மீண்டும் அவர்களை அதிமுகவுக்கு இழுக்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளது.

அதற்காக கட்சியில் திறமையான சிலரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வெற்றிகரமாக சில அமமுக தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அவர்களுக்குப் பதவி மற்றும் தேர்தல் செலவுகள் ஆகிய சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனால் கூடிய விரைவில் அமமுக நிர்வாகிகளிடம் இருந்து ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
webdunia

அதிமுக குறிவைத்திருப்பது தங்க தமிழ்ச்செல்வனைதான் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. திமுக வும் அவருக்குத் தூண்டிலை போட்டு வருகிஅறது. இதற்காக அமமுக வில் இருந்து வந்ந்துள்ள செந்தில் பாலாஜியையே உபயோகித்து வருகிறது. செந்தில் பாலாஜி மூலம் தங்கத் தமிழ்ச்செல்வனிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜியும் தலைமையில் இருந்து வந்துள்ள முதல் வேலை என்பதால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள் – அதிகாரிகளை விளாசிய நீதிபதிகள்