தேனியில் டிடிவி தினகரன் போட்டி.. ஓபிஎஸ் அறிவிப்பு.. கரை சேருவாரா தங்க தமிழ்ச்செல்வன்?

Mahendran
சனி, 23 மார்ச் 2024 (14:29 IST)
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் தேனி தொகுதி ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தேனி தொகுதி வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் இன்னும் ஓபிஎஸ் அவர்களுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் வாக்குகளையும் சேர்த்தால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என்று தான் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வனுக்கு  கூட்டணி கட்சிகளின் பலம் இருப்பதால் அவரும் கடும் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி மாறி உள்ளதை அடுத்து அந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments