Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன்.. குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல்..!

ttv dinakaran
Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (12:22 IST)
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கூட்டணியில் இணைந்து சிவகங்கை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட போவதாகவும் அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட போவதாக அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சிவகங்கை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட போவதாகவும் இப்போதே அவரது கட்சி தொண்டர்கள் ஆதரவு திரட்ட தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

முக்குலத்தோர் அதிகம் உள்ள இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற நிலையில் தற்போது அந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் டிடிவி தினகரனுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டிடிவி தினகரனை எதிர்த்து திமுக கூட்டணியில் இந்த தொகுதியில் போட்டுயிடுபவர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments