இஸ்லாமியர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது..தினகரன்

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (08:56 IST)
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒரு முதியவர் உயிரிழந்தார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதியவர் உயிரிழந்ததற்கும் சிஏஏ போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ”சிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments