ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே - எடப்பாடியை விளாசிய தினகரன்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (14:46 IST)
போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையில்லாதது என ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது.   போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது.  
 
இந்நிலையில், ரூ.55 ஆயிரமாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி, அதாவது, ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக மாற்றும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுவும், ஜூலை 2017 முதல்  முன் தேதியிட்டு இந்த சம்பள உயர்வு அளிக்கப்படவுள்ளது. இந்த உயர்வின் காரணமாக, அரசுக்கு மாதம் ரூ.25.32 கோடி செலவு அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 
அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி இல்லை என தமிழக அரசு கூறும் போது இந்த ஊதிய உயர்வு தேவையா என கருத்து தெரிவித்த திமுக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்  எங்கள் ஊர் பக்கம் ‘ஊரான் வீட்டு நெய்யே...என் பொண்டாட்டி கையே’ என ஒரு பழமொழி சொல்வார்கள். அதை எடப்பாடி நன்றாக செய்கிறார். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அவர் உடைக்கிறார் என கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: கூகுளில் சியர்ச் செய்தால் கிடைக்கும் ஆச்சரியம்..!

20 நாட்களாக காணாமல் போன மாணவி பிணமாக மீட்பு.. ஆசிரியரே கொலை செய்தாரா?

மாணவியின் தலையில் அடித்த ஆசிரியை.. மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

EVM மிஷினில் கலரில் வேட்பாளர்களின் புகைப்படங்கள்.. தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி..!

கர்ஜனை கனிமொழி .. சிம்மசொப்பனமாக செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments