Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது புது வேஷம் கட்டும் திமுக - டிடிவி தினகரன் கண்டனம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (16:04 IST)
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சிப்பதா என திமுகவுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம் என வீராவேசமாக பேசிவிட்டு  பதவிக்கு வந்தபிறகு, மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம் என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது. 
 
இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு திரு.கருணாநிதி செய்ததை இப்போது திரு. ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார். 
 
அரசாங்கத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசிய  போது திரு.ஸ்டாலினுக்குத்  தெரியாதா?  தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க  முயற்சிக்கலாமா? எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments