Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ ரஜினியின் வாய்மை வென்றது ’.. டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:01 IST)
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை, திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்ற நிலையில், '#தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது' என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் அந்நிகழ்வில் பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினி மீது சென்னை மற்றும் கோவை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து இந்த புகார்களை வழக்காக பதியக்கோரி மனு தொடரப்பட்டது. அதில், ரஜினி மீது நவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என கூறியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து வேறு வழி இன்றி  திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தலைவரஜினியின் -வாய்மை வென்றது என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 
ரஜினி அரசியலுக்கு இன்னும் வரவில்லை ஆயினும் அவர் வெளியிட்ட கருத்து சர்ச்சை ஆனதை தொடர்ந்து, அதற்கு அவர் மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய நிலையில் தமிழக திராவிட கட்சிகளுக்கு போட்டியாக ரஜினி அரசியல் செய்யப் போகிறார் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments