Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியா வாங்க.. இன்பமாய் இருக்கலாம்! வலை வீசிய பெண்! – சிக்கிய இளைஞருக்கு நடந்த சோகம்!

Advertiesment
தனியா வாங்க.. இன்பமாய் இருக்கலாம்! வலை வீசிய பெண்! – சிக்கிய இளைஞருக்கு நடந்த சோகம்!
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:30 IST)
முகப்புத்தகம் மூலம் ஆசை வார்த்தை பேசி இளைஞரை கடத்தி சித்ரவதை செய்த வழக்கில் இளம்பெண் மற்றும் அவரது வருங்கால கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத் நிஷா என்ற கல்லூரி மாணவியுடன் ஃபேஸ்புக் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் அடிக்கடி ஆபாசமாகவும், பாலியல் சம்பந்தமாகவும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் வினோத்தை நேரில் வரும்படி ரகமத் நிஷா கூறியுள்ளார். பலவிதமான கற்பனைகளால் ஆபத்தை உணராமல் ரஹமத் நிஷாவை சந்திக்கு திருச்சி சென்றுள்ளார் வினோத்.

அங்கு 7 பேர் கொண்ட கும்பல் வினோத்தை ஆட்டோவில் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் வினோத்தின் பைக்கையும் பறித்துக் கொண்ட அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து வினோத் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் வினோத்தை கடத்தியது ரகமத் நிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க உள்ள அன்சாரி ராஜா என்பது தெரிய வந்துள்ளது. அன்சாரி ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் ரகமத் நிஷா மூலம் ஃபேஸ்புக்கில் ஆசை வார்த்தை பேசி ஆட்களை வரவழைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அன்சாரி ராஜாவின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 44.65 லட்சம் கொரோனா பாதிப்புகள்! – மோசமடையும் நிலவரம்!