Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் - திமுக ஷாக்!!

Webdunia
திங்கள், 9 மே 2022 (11:46 IST)
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

 
ஆம், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
 
திமுகவில் உதயநிதிக்கே முன்னுறிமை வழங்கப்படுகிறது. திமுகவில் 15 வருடமாக உழைத்த எனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக அங்கீகாரம் தராமல் உள்ளார்கள். திமுகவில் அங்கீகரிக்கப்படவில்லை என வருத்தம் உள்ளது. 
 
பதவியை வேண்டி பாஜகவில் இணையவில்லை. உழைப்புக்கு அங்கீகாரம் குடுக்கும் இடத்தில் இணையவேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்தேன். உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமே கொடுங்கள் என அண்ணாமலையிடம் கேட்டுள்ளேன்.நான் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்கும் இடத்தில் எனது தந்தை திருச்சி சிவா இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments