Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன வாரம் கிஸ், இந்த வாரம் ஆளே மிஸ்: எஸ்.ஐ-யின் லீலைகள்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (12:27 IST)
கடந்த வாரம் திருச்சியில் நைட் டியூட்டியின் போது சப் இன்ஸ்பெக்டர் பெண் போலீஸை முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சப் இன்ஸ்பெக்டர் வேறு ஒரு பெண்ணுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். 
 
திருச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணி (50) என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருகிறார். இவர் நைட் டியூட்டியின் போது அங்கிருந்த பெண் போலீஸிடம்,  சில்மிஷத்தில் ஈடுபட்டார். 
 
இதனையடுத்து அந்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பெண் போலீஸின் சம்மதத்துடனே இது நடைபெற்றதாக கூறினார். ஆனால் அந்த பெண் காவலரிடம் விசாரித்த போது அவர் வலுக்கட்டாயமாக என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் என தெரிவித்தார். 
 
இதனால், பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்தது, பாலியல் தொந்தரவு கொடுத்தது, மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
 
எப்படியும் தன்னை கைது செய்துவிடுவார்கள் என தெரிந்துக்கொண்ட பாலசுப்பிரமணி முன்ஜாமினுக்கும் முயற்சி செய்தார். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துவந்துள்ளது.  
 
இந்நிலையில், பாலசுப்பிரமணி அந்த பெண்ணுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். மூன்று நாட்களாக தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்