Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கினான் பொம்மை முகமூடி திருடன்; லலிதா ஜுவல்லரி நகைகள் மீட்பு!

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:39 IST)
திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகை திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. 
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 
நேற்று இது தொடர்பாக 6 வடமாநிலத்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த நிலையில், தற்போது உண்மையான குற்றவாளி சிக்கியுள்ளான். ஆம், துருவாரூரில் வாகன் தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபரிடம் சோதனை செய்தனர். 
அப்போது அந்த நபரிடம் 5 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. அந்த நகைகளின் பார்கோடை சோதனை செய்ததில் அது லலிதா ஜுவல்லரியில் திருட போன நகைகளின் பார்கோடுடன் ஒத்துபோனது. இதனால், அந்த நபரை கைது செய்தனர். அவன் திருச்சியை மணிகண்டன் என தெரியவந்துள்ளது. 
 
மேலும், இவனுடன் திருடிய இன்னொருவன் சீராத்தோப்பு சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர். மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த 5 ஜிலோ தன்னுடைய பங்கு அதை பெற்றுக்கொண்டு வந்த போது சிக்கிவிட்டேன் என தெரிவித்துள்ளான். மணிகண்டனிடம் இருது 5 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் குளிக்க தடை: குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி..

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments