Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வழியாக தேதி அறிவிக்கப்பட்ட திமுக திருச்சி மாநாடு!

Advertiesment
ஒரு வழியாக தேதி அறிவிக்கப்பட்ட திமுக திருச்சி மாநாடு!
, திங்கள், 1 மார்ச் 2021 (15:08 IST)
திமுக திருச்சி அருகே நடத்தும் சிறுகனூர் மாநாடு மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே உள்ள சிறுகனூர் என்ற இடத்தில் திமுக நடத்தும் பிரம்மாண்டமான மாநாடு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. முதலில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்க இருந்த மாநாடு பின்னர் 400 ஏக்கராக மாறியது. அதனால் பணிகள் முடிய தாமதமானதால் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 7 ஆம் தேதி மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் மதுரவாயல் நெருஞ்சாலையில் போயிருக்காரா? – நீதிபதிகள் கேள்வி!