திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (11:27 IST)
தமிழகத்தில் சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சென்னையில் பள்ளி ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், பள்ளி தாளாளர் உள்ளிட்ட பலர் பல்வேறு வழக்குகளில் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறை தலைவராக உள்ள பால் சந்திரமோகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக சம்பந்தப்பட்ட மாணவிகளே புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் பால் சந்திரமோகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

அடுத்த கட்டுரையில்