Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலையை தொடங்குமா “லாம்ப்டா” கொரோனா!? – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (11:13 IST)
கொரோனா வேரியண்டுகளிலேயே அபாயகரமானதாக கருதப்படும் “லாம்ப்டா” கொரோனாவால் உலகில் மூன்றாம் அலை ஏற்படலாம் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டாவின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பெருவில் க்ண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா ப்ளஸை விட வீரியமிக்கது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேரியண்ட் கடந்த ஆகஸ்டில் பெருவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 30 நாடுகளுக்கு  மேல் இது பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. லாம்ப்டா வைரஸ் வீரியமிக்கது, வேகமாக பரவக்கூடியது என்பதால் மூன்றாவது அலை பரவலுக்கு லாம்ப்டா காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments