Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி வந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறி – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (10:14 IST)
மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது இந்தியாவையும் வந்தடைந்துள்ளது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில் 11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் இதுவரை 96,729 பேர் சோதனை செய்யப்பட்டதாகவும், அதிஒல் 1,292 பேர் வீடுகளில் இருந்தபடியே கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments