Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படியில் பயணம்.. நொடியில் மரணம்! சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பறிபோன உயிர்!

Prasanth Karthick
வியாழன், 3 அக்டோபர் 2024 (13:16 IST)

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நேற்று வைகை விரைவு ரயில் அதிவிரைவாக சென்றபோது சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை நெருங்கியபோது ரயிலில் பயணித்த இளைஞர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

 

விசாரணையில் அந்த இளைஞர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்துள்ளது. ரயிலில் அவர் கதவின் அருகே உட்கார்ந்து வந்துள்ளார். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை, ரயில் வேகமாக கடந்தபோது அவர் கால் நடைமேடையில் வேகமாக மோதியதில் நிலைக்குலைந்து விழுந்த அவர், 150 மீட்டர் தொலைவுக்கு நடைமேடையில் இழுந்து செல்லப்பட்டு, மீண்டும் வேகமாக சென்றுக் கொண்டிருந்த ரயிலின் இடையே சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளாவில் போய் மருத்துவ குப்பையை கொட்டுவேன்.. நானே லாரியில் போவேன்! - அண்ணாமலை எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. அடுத்து என்ன?

இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

பணியில் மோதல்.. விஏஓவை அலுவலகத்தில் பூட்டி வைத்த உதவியாளர்.. பெரும் பரபரப்பு..!

தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு காலியா? விலகிய நிர்வாகிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments