Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரும் மே மாதத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் !

Advertiesment
வரும் மே மாதத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் !
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:10 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி  அரசுப் போக்குவரத்து  ஊழியர் சம்மேளத்தினர் போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 

தமிழ்நாடு  போக்குரத்துறையில்  ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனன் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கம் வேலை நிறுத்த  நோட்டீஸ் அளித்துள்ளது,.

வரும் மே  மாதம் 3 ஆம் தேதி  வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, மாநாகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரரிடம் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர்  நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மேலும், தமிழக போக்குவரத்துறையில் ஒப்பனந்த அடிப்படையில், ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டுனர்களை நிரந்தரமான பணியில் அமர்ந்த  வேண்டும் என்று   நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் மே மாதம் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்,கோடை விடுமுறை சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டும் சூழல்  உருவாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுயநலவாதிகளின் தூண்டுதலால் போராட்டம்: சென்னை மெரினா லூப் குறித்து நீதிமன்றம்..!