Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

Advertiesment
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்  வாபஸ்
, சனி, 27 பிப்ரவரி 2021 (15:34 IST)
இன்று 3 வது நாளாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் 60 சதவீத பேருந்துகள் இயக்கவில்லை இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி கோவையில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எல் பி எஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் 1200 பேருந்துகள் கோவை கோட்டத்தில் 3000 நகரப் பேருந்துகள் மற்றும் 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன 60% பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 3 வது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது..

தொழிற்சங்கள் , போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதா? போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்!