Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேச்சுவார்த்தை தோல்வி; நாளை முதல் பஸ்கள் ஓடாது: ஸ்தம்பிக்க போகும் தமிழகம்!

பேச்சுவார்த்தை தோல்வி; நாளை முதல் பஸ்கள் ஓடாது: ஸ்தம்பிக்க போகும் தமிழகம்!

பேச்சுவார்த்தை தோல்வி; நாளை முதல் பஸ்கள் ஓடாது: ஸ்தம்பிக்க போகும் தமிழகம்!
, ஞாயிறு, 14 மே 2017 (15:54 IST)
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர்.


 
 
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையாக உள்ளது. இந்த நிலுவைத்தொகை, பஞ்சப்படி, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்றவற்றை பல காலமாக வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வரும் மே 15-ஆம் தேதி (நாளை) முதல் ஈடுபட போவதாக அறிவித்தது.
 
இதனையடுத்து 6 கட்டங்களாக தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்தார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.500 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார்.
 
இதனால் போக்குவரத்து சங்கங்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 7000 கோடி ரூபாய் மட்டுமே வழங்க ஒப்புதல் அளித்திருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று அறிவித்துள்ளனர்.
 
இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் அலுவலகம் செல்வோர், கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுவர். இன்று நள்ளிரவு முதலே பஸ்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் வேலை நிறுத்தம் தற்போதே தொடங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கி தமிழகமே ஸ்தம்பிக்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையை துண்டித்து கடலூரில் வீசியது ஏன்?: கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்!