தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி அருகே பேருந்து நடத்துனர் ஒருவர் இருக்கையோடு கீழே விழுந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்தனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் நேற்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்திய நிலையில் ஆலோசனைக்கு பின்னர் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புகளை அடுத்து 48 மணி நேரத்தில் சரி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் இன்று மற்றும் நாளைக்குள் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.