Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (17:12 IST)
பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது.  
 
மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
 
பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத்தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாணவர்களிடம்  மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 
 
இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
 
ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.
 
காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments